Connect with us

எடை குறைத்தால் IPLல் சேர்த்துக்கொள்வேன் – தோனி உடனனான உரையாடல் குறித்து மனம்திறந்த ஆப்கான் கிரிக்கெட் வீரர்..

Featured

எடை குறைத்தால் IPLல் சேர்த்துக்கொள்வேன் – தோனி உடனனான உரையாடல் குறித்து மனம்திறந்த ஆப்கான் கிரிக்கெட் வீரர்..

ஷாசாத் ஒரு சிறந்த வீரர் அவர் எடை குறைத்து விட்டு வந்தால் IPLல் சேர்த்துக்கொள்வேன் என அவர் நகைச்சுவையாக கூறினார் தோனியுடன் பேசிய அந்த நிமிடம் என் வாழ்வின் மிக சிறந்த நிமிடம் என எம்.எஸ்.தோனியுடனான உரையாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது அஸ்கார் ஆப்கன்.

என எம்.எஸ்.தோனி குறித்து மனம் திறந்து பேசியுள்ள முகமது அஸ்கார் கூறியதாவது :

“2018 ஆசிய கோப்பை தொடரின்போது தோனியுடன் நீண்ட நேரம் உரையாடினேன். முகமது ஷாசாத் குறித்து அதிகம் பேசினோம். “ஷாசாத் உங்கள் மிகப்பெரிய ரசிகர்” என நான் தோனியிடம் கூறினேன். அதற்கு “ஷாசாதுக்கு பெரிய தொப்பை உள்ளது, 20 கிலோ எடை குறைத்தால் IPLல் சேர்த்துக்கொள்கிறேன்” என தோனி நகைச்சுவையாக பதிலளித்தார்.

அப்படியே இந்த பக்கம் பார்த்தால் , ஆசிய கோப்பை முடிந்து ஆப்கானிஸ்தான் திரும்பிய போது ஷாசாத் 5 கிலோ கூடியிருந்தார் என வேடிக்கையாக தெரிவித்தார் .

எம்.எஸ்.தோனியுடன் பேசிய அந்த நிமிடம் என் வாழ்வின் மிக சிறந்த நிமிடம் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் ஒரு ரசிகனாக அன்று இரவு நான் நன்றாக தூங்கினேன் என எம்.எஸ்.தோனியுடனான உரையாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது அஸ்கார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 மில்லியன் பார்வைகள் கடந்த ‘மோனிகா’ – அனிருத்தின் 45வது சாதனை

More in Featured

To Top