Connect with us

நினைத்ததை சாதித்த இஸ்ரோ – எல்.1 புள்ளிக்கு வெற்றிகரமாக சென்றது ஆதித்யா எல்.1 விண்கலம்..!!

Featured

நினைத்ததை சாதித்த இஸ்ரோ – எல்.1 புள்ளிக்கு வெற்றிகரமாக சென்றது ஆதித்யா எல்.1 விண்கலம்..!!

சுட்டெரிக்கும் சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் தற்போது வெற்றிகரமாக எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெருமைகளின் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரோ கடந்த ஆண்டு இருபெரும் விண்கலங்களை அனுப்பி உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது .

நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி பிரம்மாண்ட சாதனை படைத்த இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு வெற்றிகரமாக அனுப்பியது .

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 02ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

திட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் விண்வெளியில் பயணம் செய்த இந்த விண்கலம் திட்டமிட்டபடி இன்றை இலக்கை அடைந்துள்ளது .

உலக நாடுகள் ஆய்வு செய்ய அஞ்சி வந்த நிலையில் சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று வெற்றிகரமாக எல்-1 புள்ளியை சென்றடைந்துள்ளதாக இஸ்ரோ விஞானிகள் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த எல்-1 என்ற இடத்திலிருந்து சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய கதிர்கள், அதன் காந்தப்புலங்கள், உள்ளிட்டவை குறித்து ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும் என்றும் இனி ஆதித்யா விண்கலம் மேல் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு அதி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நடப்பாண்டில் தொடக்கத்தில் நல்லதொரு சாதனையை படைத்தது நாட்டுக்கு மக்களுக்கு நல்ல செய்தி சொல்லியுள்ள இஸ்ரோவுக்கு தற்போது பல தரப்பில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Richard Rishi உடன் ரக்ஷனா ஹீரோயின்! Draupadi 2 First Look Trending!”

More in Featured

To Top