Connect with us

கதைக்கு தேவைப்பட்டால் ஆடையில்லாமல் கூட நடிக்கத் தயார்.. பிரபல நடிகை ஓபன் ஸ்டேட்மென்ட்

Swetha_Menon

Cinema News

கதைக்கு தேவைப்பட்டால் ஆடையில்லாமல் கூட நடிக்கத் தயார்.. பிரபல நடிகை ஓபன் ஸ்டேட்மென்ட்

கிளாமர் நடிகை என அறியப்படும் கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், தேவைப்பட்டால் ஆடையில்லாமல் கூட நடிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் சிநேகிதியே, நான் அவன் இல்லை 2, இணையதளம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். தமிழில் குறைவான படங்களே நடித்தாலும், இவர் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

எனினும், பெரும்பாலான படங்களில் இவர் மிகவும் கிளாமர் காட்டியே நடித்ததால், இவர் அங்கு கிளாமர் நடிகையாகவே பார்க்கப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில், தான் அனைத்து படங்களிலும் கிளாமராக மட்டுமே நடிப்பதாக வரும் விமர்சனங்கள் குறித்து பேசிய ஸ்வேதா மேனன், தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கிறார்களோ அதையே நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிகினியோ இல்லை ஆடை இல்லாமலோ, கதைக்கு தேவையென்றால் எப்படியும் நடிக்கத் தயார் என்றும், அதுதான் ஒரு நல்ல சினிமாவாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அதைத் தவிர மற்றவர்கள் செய்யும் விமர்சனங்கள் தனக்கு ஒரு பொருட்டே அல்ல எனும் தொனியில் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜயகுமாரின் அடுத்த புரட்சி - வெளியானது எலக்சன் படத்தின் ட்ரைலர்..!!

More in Cinema News

To Top