Connect with us

பூவே உனக்காக பட நடிகை சங்கீதாவின் மகள் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Featured

பூவே உனக்காக பட நடிகை சங்கீதாவின் மகள் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறு வயதிலேயே அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக மின்னியவர் சங்கீதா. ‘எல்லாமே என் ராசாதான்’ என்ற திரைப்படத்தில் வெறும் 16 வயதிலேயே ஒரு குழந்தையின் தாயாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்.

பின்னர், நடிகர் விஜய்யுடன் நடித்த ‘பூவே உனக்காக’ திரைப்படம் இவருக்கு பெரும் பிரபலத்தையும் ரசிகர்களின் அன்பையும் பெற்றுத்தந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சரவணனுடன் சங்கீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைத்துறையிலிருந்து ஒதுங்கிய சங்கீதா, சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது மகளின் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “எனது மகளுக்கு தற்போது 24 வயது ஆகிறது. பள்ளி படிப்பை முடித்த பிறகு பைலட்டாக வேண்டும் என்பது அவளின் ஆசையாக இருந்தது. அதற்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் பயிற்சி பெற்றாள். தற்போது பயிற்சியை முடித்து இந்தியாவிற்கு திரும்பி, பைலட்டாக நாட்டுக்குள் விமானங்களை ஓட்டி வருகிறார்” என்றார். மேலும், “என் மகள் ஓட்டும் விமானத்தில் ஒருமுறை பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருக்கிறது. அந்த நாள் விரைவில் வரும் என நம்புகிறோம்” என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top