Connect with us

ராயனுக்கு பின் ‘வேட்டையன்’ களத்தில் இறங்கிய நடிகை துஷாரா விஜயன் – வைரல் மேட்டர் வைரல் போட்டோஸ்..!!

Cinema News

ராயனுக்கு பின் ‘வேட்டையன்’ களத்தில் இறங்கிய நடிகை துஷாரா விஜயன் – வைரல் மேட்டர் வைரல் போட்டோஸ்..!!

தனுஷின் ராயன் படத்தில் ஒரு கலக்கு கலக்கிய நடிகை நடிகை துஷாரா விஜயன் தற்போது சூப்பர் ஸ்டாரின் வேட்டையின் பட பணிகளில் பிஸியாக இறங்கியுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த அவரது 50 ஆவது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் தனது திறமையை நிரூபித்து காட்டியவர் நடிகை துஷாரா விஜயன் . ராயன் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு 100 சதவீத உழைப்பை கொடுத்த துஷாராவின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தனுஷின் ’ராயன்’ படத்தின் வெற்றி கொடுத்த புத்துணர்ச்சியுடன் தற்போது சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கான பணிகளில் நடிகை துஷாரா இறங்கியுள்ளார் .

பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள துஷாரா விஜயன் தன்னுடைய பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டப்பிங் பணிகளில் நடிகை துஷாரா ஈடுபட்டுள்ள புகைப்படங்களும் வெளியாகி வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலின் “மருதநாயகம்: புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் உயிர் பெறுமா?”

More in Cinema News

To Top