Connect with us

இலங்கையில் எஸ்.கேவுக்கு கூடும் மவுசு – அத்தனைக்கும் அயலான் தான் காரணமா..?

Cinema News

இலங்கையில் எஸ்.கேவுக்கு கூடும் மவுசு – அத்தனைக்கும் அயலான் தான் காரணமா..?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படம் உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வரும் நிலையில் இலங்கையில் மிக பெரிய வசூல் ஈட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பாண்டியான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமான வெளியான திரைப்படம் தான் அயலான்.

சயின்ஸ் பிக்சன் படமாக உருவான இப்படத்தில் எஸ்.கே ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியான நாள் முதல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பல வருட போராட்டத்திற்கு பின் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி கண்டுள்ளதால் அயலான் படக்குழு தற்போது செலிப்ரேஷன் மோடில் உள்ளனர் .

இந்நிலையில் உலகம் முழுவதும் நல்ல வசூலை ஈட்டி வரும் அயலான் படம் இலங்கையிலும் பிரம்மாண்ட வசூலை ஈட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது .

அதன்படி அயலான் திரைப்படம் இலங்கையில் 11,623,350 LKR ( 36.17K USD ) இந்திய மதிப்பில் சுமார் ரூ 30 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏரளமான தமிழர்கள் வாழ்ந்து வருவதால் அங்கு தமிழ் சினிமாவுக்கும் தமிழ் நட்சத்திரங்களுக்கும் நல்ல மவுசு உள்ளது.

அந்தவகையில் ரஜினி கமல் விஜய் அஜித் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு அந்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரு தமிழகருக்கு கூட இடமில்லையா - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் வீரர் cheeka காட்டம்..!!

More in Cinema News

To Top