Connect with us

‘The G.O.A.T’ படப்பிடிப்புக்காக கேரளா வந்த நடிகர் விஜய் – உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்..!!

Cinema News

‘The G.O.A.T’ படப்பிடிப்புக்காக கேரளா வந்த நடிகர் விஜய் – உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்..!!

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘The G.O.A.T’ படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜயின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் . உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தான் ‘The G.O.A.T’

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்த தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் இன்று கேரளா சென்றுள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல் - நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top