Connect with us

“தலைவர் ரஜினியிடம் வாழ்த்து பெற்று தரமான சம்பவம் செய்ய தொடங்கிய பழைய ஜோக் தங்கதுரை!”

Cinema News

“தலைவர் ரஜினியிடம் வாழ்த்து பெற்று தரமான சம்பவம் செய்ய தொடங்கிய பழைய ஜோக் தங்கதுரை!”

காமெடி, கானா பாடல்கள் என வலம் வந்த தங்கதுரை விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு முதல் சீசனில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானா்ா. இவரை தங்கதுரை என்று சொல்வதை விட பழைய ஜோக் தங்கதுரை என்று சொன்னால் தான் ரசிகர்களுக்கு இவரை அடையாளம் தெரியும். ஏனேன்றால் இவருடைய ஜோக்குகள் எல்லாம் பழையதாக இருந்தாலும் ரசிக்கும் அளவுக்கு இருக்கும். அந்தளவுக்கு தன்னுடைய கடிஜோக்குகளால் ரசிகர் பட்டாளங்களை பெற்றுள்ளாா்.

காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தங்கதுரை, தமிழில் எங்கேயும் எப்போதும், மாநகரம், அட்டகத்தி போன்ற பல படங்களில் காமெடி வேடங்களில் தோன்றி அசத்தியுள்ளாா். இவருடைய கேரியாில் சார்ப்பட்டா பரம்பரை நல்ல வரவேற்பை பெற்றுதந்தது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தங்கதுரை தற்போது தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறாா். அந்த வீடியோ பதிவில், “கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் சாரின் மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன்.

இதை தலைவர் ரஜினி சாரிடம் சொல்லி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன். அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன். உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி. மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், நடிகர் விவேக் வழியில் மரம் வளர்ப்பு குறித்து மக்களிடம் எடுத்து செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், இதுபற்றி நடிகர் ரஜினிகாந்திடம் சொல்லி வாழ்த்து பெற்று இனி வருடத்திற்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளதாகவும் நடிகா் தங்கதுரை தெரிவித்துள்ளாா். தங்கதுரையின் அந்த வீடியோவிற்கு மக்களின் பாராட்டும் வாழ்த்தும் குவிந்துவருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!

More in Cinema News

To Top