Connect with us

ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அண்ணனுக்கு வீரவணக்கம் – விஜயகாந்தின் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல்

Cinema News

ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அண்ணனுக்கு வீரவணக்கம் – விஜயகாந்தின் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல்

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யாவும் உருக்கமாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை காலமாகி உள்ளார் .

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த், தேமுதிக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியல் வாழ்விலும் மிடுக்கான நடைபோட்டு வந்தார் .

சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலன் இன்றி காலமாகி உள்ளார் .

கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . அந்தவகையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது இரங்கலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா கூறியதாவது :

‘ஒரு கண்ணில் துணிச்சலும்.. மறு கண்ணில் கருணையுமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞன். கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்தவர் அண்ணன் விஜயகாந்த்.


அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை… யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டெல்லியை வச்சு செய்த கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!

More in Cinema News

To Top