Connect with us

“நடிகர் கவினின் அடுத்த படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன்! ஹீரோயின் யார் தெரியுமா?!”

Cinema News

“நடிகர் கவினின் அடுத்த படத்தில் இணைந்த நடிப்பு அரக்கன்! ஹீரோயின் யார் தெரியுமா?!”

நடிகர் கவின் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் SJ சூர்யா இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் கவின் தற்போது சதீஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், இளன் இயக்கத்தில் ‘Star’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அவர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கவின் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தை சிவபாலன் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் நெல்சன் தயாரிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் SJ சூர்யா இணைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கவின், நடிப்பு அரக்கன் SJ சூர்யா, அனிருத், நெல்சன், பிரியங்கா மோகன், ஆகியோர் இணையும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top