Connect with us

ராமர் கோவில் திறப்பு தினத்தில் நடிகர் சமுத்திரக்கனி வெளியிட்ட அடுத்த பட First Look Poster! Viral!

Cinema News

ராமர் கோவில் திறப்பு தினத்தில் நடிகர் சமுத்திரக்கனி வெளியிட்ட அடுத்த பட First Look Poster! Viral!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று திறக்கப்பட்ட நிலையில் இன்று தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டுள்ளார் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி.

இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு போஸ்டரில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் சிலைகள் இருக்கும் புகைப்படத்தையும், பின்னணியில் ராமர் கோயில் புகைப்படத்தையும் பதிவு செய்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான சமுத்திரக்கனி, திரை உலகில் பிஸியான நடிகராக உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதளத்தில் சற்றுமுன் ஒரு பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் ’ஸ்ரீ ராமரின் தெய்வீக ஆசீர்வாதத்துடன்’ இன்று அதாவது ஜனவரி 22 ஆம் தேதி 12.20 மணிக்கு டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ரிலீஸ் ஆனது. இந்த அறிவிப்பை அவர் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியிட்டுள்ளதால் இந்த படம் தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் ராமருடன் சம்பந்தப்பட்ட வகையில் ‘ராமம் ராகவன்’ என வைக்கப்பட்டுள்ளது என்று, அவர் பதிவு செய்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் இதற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top