Connect with us

“நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டவிருக்கும் புதிய திருமண மண்டபம்! ஆனால் ஒரு Condition..!”

Cinema News

“நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டவிருக்கும் புதிய திருமண மண்டபம்! ஆனால் ஒரு Condition..!”

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் திருமண மண்டபம் ஒன்று கட்டப் போவதாகவும் அதில் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’ஜிகர்தண்டா 2’ படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இவர் ஏற்கனவே பல்வேறு சமூக சேவை செய்து உள்ள நிலையில் தற்போது ரசிகர்களுக்காக ஒரு திருமண மண்டபம் கட்ட போவதாக தெரிவித்துள்ளார். அதற்கான இடத்தையும் பார்த்து விட்டதாகவும் தனது அம்மா பெயரில் கட்டப்பட இருக்கும் இந்த திருமண மண்டபத்தில் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனது ரசிகர் ஒருவர் திருமண பத்திரிகை கொடுக்க வந்த போது எங்கே கல்யாணம் என்று கேட்டதாகவும், அதற்கு மண்டபம் எல்லாம் வைத்து நடத்த பணம் இல்லை, அதனால் கோவிலில் தான் திருமணம் என்று கூறினார். அவர் கூறியவுடன் தான் ரசிகர்களுக்காக ஒரு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இடமும் பார்த்து முடிவாகிவிட்டது. விரைவில் கட்டிட பணிகள் தொடங்கும். அதில் எனது ரசிகர்களுக்கு இலவசம் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். மேலும் ’ஜிகர்தண்டா 2’ படம் குறித்தும் கார்த்திக் சுப்புராஜ் குறித்தும் அவர் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மும்பை மண்ணில் பேட்டிங்கில் மிரட்டுமா கொல்கத்தா..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top