Connect with us

நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் அனுபவம் இல்லாதவர் – போறபோக்கில் கலாய்த்த அண்ணாமலை

Featured

நடிகர் பிரகாஷ் ராஜ் அரசியல் அனுபவம் இல்லாதவர் – போறபோக்கில் கலாய்த்த அண்ணாமலை

பாஜகவை பற்றி பேசும் அளவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜுக்கு , அரசியல் அனுபவம் இல்லை என தமிழக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது தற்போது செம வைரலாக வலம் வருகிறது .

சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணாமலை கூறியதாவது :

பாஜகவை பற்றி பேசுவதற்கு, அரசியல் அனுபவம் இல்லாதவர் நடிகர் பிரகாஷ் ராஜ். நடிகராக அவர் மீது மதிப்புள்ளது. ஆனால், அரசியலில் அவரது கருத்துக்கு மதிப்பளிக்க விரும்பவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியை திட்டுவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். பெங்களூரு சென்டரல் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த பிரகாஷ் ராஜுக்கு அரசியல் அனுபவம் பத்தாத காரணத்தினால் தான் பாஜகவையும் பிரதமரையும் அவர் குறை கூறி வருகிறார் .

ஜூன் 4ஆம் தேதி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடத் தயாராக இருங்கள் . தாமரை படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்குப் பின் அனைவரும் பார்ப்பார்கள்; ஜூன் 4ஆம் தேதிக்குப் பின் வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது

தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற இருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top