Connect with us

“நடிக்க வரும் முன் இந்த பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய ஆசை! நடிகர் மாதவன் பேச்சு!”

Cinema News

“நடிக்க வரும் முன் இந்த பாலிவுட் நடிகையை திருமணம் செய்ய ஆசை! நடிகர் மாதவன் பேச்சு!”

கடந்த 1988இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கயாமத் சே கயாமத் தக். ஆமிர் கான் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் பாலிவுட் நடிகையாகவும், 1990களில் கனவு கன்னியாகவும் திகழ்ந்த ஜூகி சாவ்லா கதாநாயகியாக நடித்திருப்பார். இந்தப் படத்துக்காக சிறந்த புதுமுகம் பிலிம்பேர் விருதையும் ஜூகி சாவ்லா வென்றார்.

இதையடுத்து நடிகர் மாதவன் ஜூகி சாவ்லாவுடன் இணைந்து தி ரயில்வே மேன் என்ற நெட்பிளிக்ஸ் சீரிஸில் நடித்துள்ளார். இந்த சீரிஸ் குறித்து நெட்பிளிக்ஸ் புரொமோ விடியோவில் பேசியிருக்கும் மாதவன், ஜூகி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஜூகி சாவ்லா இந்த தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். எல்லோரிடமும் ஒரு வாக்குமூலத்தை அளிக்க விரும்புகிறேன். நான் ஜூகி சாவ்லா கயாமத் சே கயாமத் தக் படத்தை பார்த்த பின்னர் எனது தாயாரிடம் ‘ஜூகி சாவ்லாவை திருமணம் செய்ய விரும்புகிறேன்’ எனக் கூறினேன். அப்போது எனக்கு அதுவே இலக்காக இருந்தது” என்றார்.

மன்சூர் கான் இயக்கத்தில் வெளியாகியிருந்த கயாமத் சே கயாமத் தக் திரைப்படம், அந்த ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய டாப் 5 படங்களில் ஒன்றாகவும், 8 பிலிம்பேர் விருதுகளையும் வென்ற படமாகவும் உள்ளது. இந்த படம் வெளியாகும்போது மாதவன் நடிகனாக இருக்கவில்லை. அவர் 1993இல் முதல் முறையாக டிவி சீரியலில் நடித்தார்.

இதன் பின்னர் பல்வேறு டிவி சீரியல்களிலும், ஷோக்களிலும் தோன்றிய அவர் 1997 முதல் சினிமாக்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்னர் கன்னட படமான சாந்தி சாந்தி சாந்தி படத்தில் நடித்தார். தற்போது மாதவன் தமிழ் உள்பட தென்னிந்திய படங்களிலும், பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராகவும் இருந்து வருகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top