Connect with us

தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா கைது – ஸ்ரீகாந்த் வழக்கில் புதிய திருப்பம்..

Featured

தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா கைது – ஸ்ரீகாந்த் வழக்கில் புதிய திருப்பம்..

நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி வந்ததாகவும், போதைப் பார்ட்டிகளை நடத்தியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் வைத்திருக்கப்படுகிறார்.

இந்த வழக்கில், “கழுகு” பட ஹீரோ நடிகர் கிருஷ்ணாவும் தொடர்புடையவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனினும், சம்மன் அனுப்பப்பட்ட பிறகு கிருஷ்ணா திடீரென தன்னைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் போன் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானார் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அவரை பிடிக்க தனிப்படையை அமைத்து தேடி வந்த போலீசார் தற்போது கிருஷ்ணாவை கைது செய்துள்ளனர். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவருக்கும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top