Connect with us

முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கும் நடிகர் கார்த்தி..!! அப்போ அடுத்த வருடம் கார்த்தி வருடம் தான் போலயே…

Cinema News

முன்னணி இயக்குனர்களுடன் கைகோர்க்கும் நடிகர் கார்த்தி..!! அப்போ அடுத்த வருடம் கார்த்தி வருடம் தான் போலயே…

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களின் பட்டியலில் டாப் 5 இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற சூப்பர் ஹிட் கிராம் பின்னணி கதையம்சம் கொண்ட படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்தி. முதல் படமே இவருக்கு பெயரையும் புகழையும் கொடுக்க அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் சினிமாவின் அடுத்தகட்டத்துக்கு இவரை கொண்டு சென்றதுடன் ரசிகர்கள் மனதிலும் தனக்கென தனி இடத்தையும் பிடிக்க வைத்துள்ளது .

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கலையில் கைதேர்ந்தவராக உள்ள இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜப்பான். எதிர்பார்த்த அளவிற்கு ஓடாத இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று டீசெண்டான கலைக்சனையும் பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

  • கார்த்தி 26 -வது படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார்.
  • கார்த்தி 27 -வது பிரேம் குமார் (96 பட இயக்குனர்) இயக்குகிறார் .
  • இதையடுத்து லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத்,பாண்டியராஜ் போன்ற இயக்குனர்களுடன் கார்த்தி கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்த்தியின் இந்த லைனப்பை பார்க்கும்போது அடுத்த வருடம் கார்த்தியின் வருடம் போல தான் தெரிகிறது.இதுவரை எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்த இவர் இந்த லனைப்பில் எத்தனை ஹிட் படங்களை கொடுக்கப்போகிறார் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'ஸ்குவிட் கேம்' 2 வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top