Connect with us

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்..!!

Featured

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்..!!

மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றுலா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக மின் விநியோகம் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி மிக்ஜாம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த டிச.18ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வோர் டிச.4 முதல் 6 வரை அபராதம் செலுத்தியிருப்பின் அடுத்த மின்கட்டணத்தில் சரி செய்யப்படும் என்றும் மிக்ஜாம் புயலால் மின்நுகர்வோரின் இடர்பாடுகளை கருதி முதல்வர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம், ஈரப்பதம் நிலவுவதால் மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் . பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் படிப்படியாக மின் விநியோகம் வழங்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் நிலைமையை புரிந்துகொண்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மதுரை முத்துவின் உதவி மனசு: அனாதை பிள்ளைகளுக்கு புதிய அத்தியாயம்!

More in Featured

To Top