Connect with us

100 கிலோவை குறைக்க சிரமப்பட்டேன்.. ஓப்பனாக பேசிய நடிகர் கார்த்தி ..!

Cinema News

100 கிலோவை குறைக்க சிரமப்பட்டேன்.. ஓப்பனாக பேசிய நடிகர் கார்த்தி ..!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடு நாயகனாக பருத்திவீரன் படத்தில் அறிமுகமாகி இப்போது தனிவிதமான அடையாளத்தை வைத்து இருக்கிறவர் தான் நடிகர் கார்த்தி..

இவர் உதவி இயக்குனராக இருந்து இப்போது சிறந்த நடிகராக உருவாகி இருக்கிறார்..இவர் நடிப்பில் அண்மையில் ஜப்பான் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.கார்த்தியின் 25வது படம் ரொம்பவும் சுமாரான வரவேற்போடு தோல்வி படமாக அமைந்து இருக்கின்றது…

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி பேசும்போது பையா படத்திற்கு பிறகு என்னையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை உணர்ந்தேன்…அதை நான் கண் கூடாக பார்த்தும் இருந்தேன்…இதனால் உடல் எடையை குறைக்க அதிகம் ஓட ஆரம்பித்தேன் ஆனால் பிரச்சனை என்னவென்றால் எனக்கு அவ்வளவு எளிதில் உடல் எடை குறையாது…அப்படி பட்ட உடல் உள்ளவன் நான் எனக்கு அது பெரிதும் சோகம் கொடுத்தது…

அந்த சமயத்திலெல்லாம் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகுவேன் ஒரு நடிகனாக நான் மாற வேண்டும் என்று நினைத்த பொழுது கூட நான் மிகவும் வலிமையான மனிதனாக மாற வேண்டும் என்று தான் நினைத்தேன்…என் அப்பா சொல்லி தந்தது அது தான் அதை நான் மனதில் வைத்தேன்..

உணவு பழக்கங்களை மாற்றினேன் 70% நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்து தான் உடல் செயல்படுகிறது அதனை சிறப்பாக செய்தேன்,அதனை போல மீதம் உள்ள 30 சதவீதம் மட்டுமே உடற்பயிற்சி..இப்படி தான் எனது உடம்பை குறைத்தேன் என்றுள்ளார் நடிகர் கார்த்தி.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பூஜையுடன் தொடங்கிய நடிகர் கவினின் அடுத்த படம் - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top