Connect with us

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..!!

Cinema News

என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு..!!

உலககெங்கும் இருக்கும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் .

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது . இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பேச்சை கேட்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இந்நிலையில் தொடர்ந்து 7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அடுத்து வர இருக்கும் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சினிமாவில் கொடுக்கப்பட்டுள்ள கமிட்மெண்டுகளால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர முடியாத சூழலில் இருக்கிறேன் . நான் விரும்பி ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன்.

எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலககெங்கும் இருக்கும் மக்களால் அதிகம் விரும்பப்படும் அசத்தலான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் தமிழ். அதில் நான் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த நிகழ்ச்சியை எனக்கு தந்த விஜய் டிவி மற்றும் அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் என நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்த தேதி இன்னும் சரிவர அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியிருப்பது பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top