Connect with us

“ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி! படத்தின் ரிலீஸ் எப்போது?!”

Cinema News

“ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி! படத்தின் ரிலீஸ் எப்போது?!”

நடிகர் ஜெயம் ரவி ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி தற்போது ’ஜெனி’ மற்றும் ’பிரதர்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Jayam Ravi Launches Naya Gadget Shop

’பிரதர்’ திரைப்படம் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகும் இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’ஜெனி’. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகிகளாக கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி மற்றும் வாமிகா கபி ஆகிய மூவர் நடித்து வருகிறார்கள்.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆரில் நடைபெற்று வருகிறது என்பதும் சுமார் 30 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top