Connect with us

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நிதி வழங்கிய நடிகர் தனுஷ்..!!

Cinema News

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நிதி வழங்கிய நடிகர் தனுஷ்..!!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிக்காக நடிகரும் தயாரிப்பாளருமான குளோபல் ஸ்டார் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வைப்பு நிதிக்காக, தனது சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் வழங்கியுள்ளார் .

தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் கனவாக இருந்து வந்த தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய திரை பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியினை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் தற்போது நடிகர் சங்க கட்டடப் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “எனக்கு நடந்த துரோகம்… ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி புது பதில்! 😱🔥”

More in Cinema News

To Top