Connect with us

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்..!!

Cinema News

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்..!!

நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது .

இதனால் அஜித்துக்கு என்ன ஆனது எதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார் என ரசிகர்கள் ஒருபக்கம் புலம்ப மறுபக்கம் அவர்க்கு எதோ பெரிய பிரச்னை இருப்பதாக பல வகையான தகவல் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மார்ச் 7 அன்று வழக்கமான உடல் பரிசோதனைக்குச் சென்றதாகவும் அதில் அவரின் காதுக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்பில் வீக்கம் இருப்பதாகவும், மைனர் ஆப்ரேஷன் மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று இருப்பதாககவும் சில மணி நேரத்தில் அஜித் நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்திருந்தார் .

அதன்படி தற்போது நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்நிலையில் அஜித் பூரண நலம் பெற்று விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் படக்குழு தரப்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொறுப்புடன் ஆடிய பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top