Connect with us

இந்தியா கூட்டணியால் விரக்தி.. மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

Aam_Aadmi_Party

Politics

இந்தியா கூட்டணியால் விரக்தி.. மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மி கட்சி வியாழன் அன்று அசாமில் 3 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி எம்பி சந்தீப் பதக், இந்தியா கூட்டணியுடன் பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யவும், வாக்காளர்களை சென்றடையவும் நேரம் கொடுப்பது முக்கியம் என்று பதக் கூறினார். இதனால், அசாமில் திப்ருகார் தொகுதியில் மனோஜ் தனோகரும், கவுகாத்தியில் பவன் சவுத்ரியும், சோனித்பூரில் ரிஷி ராஜ் போட்டியிடுவார்கள் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

தற்போதைக்கு அசாமில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தாலும், ஆம் ஆத்மி தாங்கள் முழுமையாக இந்தியா கூட்டணியுடன் உள்ளோம் என்று கூறியுள்ளதோடு, கூட்டணியில் உள்ள கட்சிகள் சீட் பேச்சுவார்த்தை செயல்முறையை விரைவுபடுத்துமாறு பதக் வலியுறுத்தினார்.

அசாமைப் பொறுத்தவரை 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 14 இடங்களில் பாஜக 9 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 3 இடங்களையும், பதுருதீன் அஜ்மலின் ஏஐயுடிஎஃப் ஒரு இடத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு முக்கிய கட்சியான சமாஜ்வாடி கட்சி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 16 மக்களவைத் தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்களை ஒருதலைப்பட்சமாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு தற்போது ஆம் ஆத்மியும் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை மழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம் - தாமதமின்றி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in Politics

To Top