Connect with us

ஆதி நடிப்பில் உருவாகும் ‘சப்தம்’ படத்தின் First Look வெளியாகி Viral!

Cinema News

ஆதி நடிப்பில் உருவாகும் ‘சப்தம்’ படத்தின் First Look வெளியாகி Viral!

இயக்குநர் அறிவழகன் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார். சோனி லிவ் ஓடிடி தளத்தில் இது ஸ்டீரிமிங் ஆகிறது. இதைத்தொடர்ந்து பார்டர் என்ற படத்தை அவர் இயக்குவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவர் தற்போது நடிகர் ஆதி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் இயக்குநர் அறிவழகனின் முதல் படமான ஈரம் படத்துக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அத்துடன் ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்கள் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தமனும், இந்த படத்தில் அவருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.

படத்தில் நடித்து வரும் இதர நடிகர்கள் குறித்த விவரம் பின் தெரியவரும் என தெரிகிறது. தமிழில் சமீப காலமாக திகில் படங்களில் வருகை குறைவாக இருந்த நிலையில், சப்தம் திரைப்படம் திகில், சஸ்பென்ஸ் படமாக ரசிகர்களை மிரட்டவுள்ளது. இந்த நிலையில் நேற்று படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top