Connect with us

தண்டவாளத்தில் ஏற்பட்ட மூடுபனியால் சீனாவில் கோர ரயில் விபத்து..!!

Featured

தண்டவாளத்தில் ஏற்பட்ட மூடுபனியால் சீனாவில் கோர ரயில் விபத்து..!!

சீனாவில் சுரங்கப்பாதையில் நின்றுகொண்டிருந்த மெட்ரோ ரயில் மீது மற்றொரு ரயில் மோதி கோரா விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் முக்கிய மாகாணங்களின் ஒன்றான பெய்ஜிங் மாகாணத்தில் சுரங்கப்பாதையில் நின்றுகொண்டிருந்த மெட்ரோ ரயில் மீது மற்றொரு ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் 500-க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தண்டவாளத்தில் பனி அதிகம் படர்ந்திருந்ததால் ஒரு ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது, அதே வழியில் வந்த மற்றொரு ரயில், பிரேக் அடித்தும் நிற்காமல் சறுக்கிக்கொண்டே சென்று, நின்றுகொண்டிருந்த ரயில் வேகமாக மோதியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த கோர விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் தற்போது வரை வெளியாவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரசன்னா–சினேகா குடும்பம்: Sweet Moments Steal the Spotlight !

More in Featured

To Top