Connect with us

9 வயதில் பிரபல நடிகைக்கு நடந்த கொடூரம்: அதிர்ச்சியான அனுபவம்!

Featured

9 வயதில் பிரபல நடிகைக்கு நடந்த கொடூரம்: அதிர்ச்சியான அனுபவம்!

நேஹா கௌடா, சன் தொலைக்காட்சியில் கல்யாண பரிசு சீரியலில் முன்னணி நாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு விஜய் டிவியில் 2022ம் ஆண்டில் பாவம் கணேசன் என்ற தொடரிலும் நடித்திருந்தார். தமிழை தாண்டி, கன்னடத்திலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். 2018ம் ஆண்டு சந்தன் கௌடாவை திருமணம் செய்துகொண்ட அவர், 6 வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை பெற்றார்.

தற்போது, குடும்பம் மற்றும் குழந்தை காரணமாக கேமரா பக்கம் வராமல் இருக்கிறார். சமீபத்தில், ஒரு யூடியூப் சேனலில், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கொடுமையான சம்பவத்தை நேஹா பகிர்ந்துள்ளார்.

“நானும் 4வது வகுப்பு படிக்கும் போது ஒரு மோசமான சம்பவம் நடந்தது. அந்த நாளில் அம்மா வீட்டில் இல்லாமல் பாட்டி மட்டும் இருந்தார். தூங்கியபின் எழுந்தபோது, அம்மா இல்லாததால் அவரை தேடி வெளியே வந்தேன். அப்போது, பக்கத்து தெருவில் ஒருவன், ‘உங்க அப்பா எனக்கு தெரியும்’ என்றான்.

அந்த மனிதன் என்னை ஒரு வாட்ச் கடைக்கு அழைத்துச் சென்று கதவை சாத்தி, ரொம்ப மோசமாக நடக்க ஆரம்பித்தான். நான் என்ன நடக்கிறது என தெரியாமல் அழுதேன். அவனின் கையை கத்தி காட்டி, அழுதா என்றான். அவன் என்னை அடித்து, என் அருகில் இருந்த ஒரு வழியில் நான் அவனிடம் இருந்து தப்பி வெளியே வந்தேன்.

சில வருடங்கள் கழித்து, என் டீச்சர் ‘குட் டச் பேட் டச்’ என்ற வார்த்தைகள் கூறியபோது, அந்த சம்பவம் என்னிடம் புரிய வந்தது. அந்த நினைவுகளை மறக்க முடியவில்லை. இப்போது அதை நினைத்தாலும் பயம் வருது.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்" – துருவ்

More in Featured

To Top