Connect with us

உ.பி.யில் மின்னல் தாக்கி 38 பேர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Featured

உ.பி.யில் மின்னல் தாக்கி 38 பேர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அங்கு நேற்று திடீரென பாய்ந்த மின்னலில் சுமார் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மின்னல் பாய்ந்ததில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .

மின்னல் தாக்கியதில் அதிகபட்சமாக பிரதாப்கர் மாவட்டத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கனமழையின் போது நிலத்தில் வேலை செய்தவர்களும், மழைக்கு மரத்தின் கீழே ஒதுங்கியவர்களும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அம்மாவட்ட அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளனர் .

மழையின் போது வெளியில் நடமாட கூடாது என்றும் மரத்தின் கீழ் நிற்க கூடாது என்றும் சிறுவயதில் இருந்தே நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிகொடுத்திருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 38 பேர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி இது போன்று நடக்கக் கூடாது!" – கடும் கண்டனம் தெரிவித்த அஜித் குமார்..
Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top