Connect with us

ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் – பீதியில் வீதியில் குவிந்த மக்கள்

Featured

ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் – பீதியில் வீதியில் குவிந்த மக்கள்

ஜப்பானில் 3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

ஜப்பான் நாட்டில் இன்று அடுத்ததடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் 4.5 ரிக்டர் அளவிற்கு மேல் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் ஜப்பான் மக்கள் மேலும் பல பேரிடர்களுக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் அடுத்தடுத்து பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 10 அடி வரை சுனாமி அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹொக்கைடோவில் இருந்து கியூஷூ பகுதி வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பதிவான இந்த நிலநடுக்கங்களின் தாக்கமாக தென்கொரியாவிலும் ஒரு சில பகுதிகளில் சிறியளவில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சோகத்தில் ரசிகர்கள் : நடப்பு ஐபில் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்..!!

More in Featured

To Top