Connect with us

அடடா வேற லெவல்ல இருக்கே : நடிகர் விஜய்யின் ‘The G.O.A.T’ படத்தின் Second Look போஸ்டர் வெளியானது..!!

Cinema News

அடடா வேற லெவல்ல இருக்கே : நடிகர் விஜய்யின் ‘The G.O.A.T’ படத்தின் Second Look போஸ்டர் வெளியானது..!!

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை செம குஷி ஆகியுள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் . உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் படம் திரைப்படம் தளபதி 68.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருந்தது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நேற்று வெளியானது.

வெங்கட் பிரபு மற்றும் தளபதியின் காம்போவில் உருமாகி வரும் இப்படத்திற்கு ‘The Greatest Of All Time’ என தலைப்பு வைக்கப்பட்டு . A Venkat Prabhu HERO என குறிப்பிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், நடிகர் விஜய் பைலட் கெட்டப்பில் 2 தோற்றங்களில் இருந்தார் .

இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதால் இப்படம் எப்படி இருக்கும் என எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது இப்படத்தின் Second Look போஸ்டர் வெளியாகி அதுவும் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சொந்த மண்ணில் ஜொலிக்குமா DC..? டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு..!!!

More in Cinema News

To Top