Connect with us

நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் பலி..!!

Featured

நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் பலி..!!

நைஜீரியா நாட்டில் உள்ள பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வட-மத்திய ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் இரண்டு மாடி பள்ளிக் கட்டிடம் ஒன்று இயங்கி வந்துள்ளது . இந்த பள்ளியில் இன்று மாணவர்கள் வழக்கம் போல் வந்து கல்வி பயின்றுள்ள நிலையில் திடீரென அந்த இடிந்து விழுந்துள்ளது .

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த 100கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டனர் இருப்பினும் இந்த ஈடுபாடுகளில் சிக்கி 22 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

கட்டிடத்தின் பலவீனமான அமைப்பு காரணமாகவும், ஆற்றங்கரைக்கு அருகில் கட்டப்பட்டதன் காரணமாகவும் இந்த விபத்து நேரிட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் கலக்க வருகிறார் பிரபாஸ் – ‘ராஜா சாப்’ மீது உச்ச எதிர்பார்ப்பு! 🔥🎬

More in Featured

To Top