Connect with us

IPL தொடரில் இன்று 2 போட்டிகள் – 454 நாட்களுக்குப் பின் களம் காணும் பண்ட்..!!

Featured

IPL தொடரில் இன்று 2 போட்டிகள் – 454 நாட்களுக்குப் பின் களம் காணும் பண்ட்..!!

நடிப்பாண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ள உள்ள நிலையில் இன்று சிறப்பான தரமான இரு போட்டிகள் நடைபெற உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது .

ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் அபாரமாக ஆடிய சென்னை அணி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று சிறப்பான தரமான இரு போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் இன்றைய நாளுக்கான முதல் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

அதிலும் குறிப்பாக சுமார் 454 நாட்களுக்குப் பிறகு பண்ட் ரசிகர்கள் முன் கிரிக்கெட் விளையாட உள்ளார் . 2022 டிசம்பர் 30ம் தேதி ஏற்பட்ட கார் விபத்தைத் தொடர்ந்து, தொடர் பயிற்சியின் மூலம் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார். இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக பண்ட் மீண்டும் களமிறங்குகிறார்.

இதேபோல் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு போட்டியில் எந்த அணி வெல்ல போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top