Connect with us

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா – மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு..!!

Featured

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா – மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு..!!

ரசிகர்களின் விண்ணை பிளக்கும் ஆரவாரத்துடன் மிரட்டலாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 51 ஆவது போட்டியில் MI – KKR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அந்த முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து மும்பை அணிக்கு கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர்.

இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒற்றை இலக்க ரங்களில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் மற்றும் ஆங்குரிஸ் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மனீஷ் பாண்டேவுடன் சேர்ந்து அதிரடியில் மிரட்டினர்.

விளையாடிய வெங்கடேஷ் அரை சதம் கடந்து அசத்த இந்த 42 ரன்கள் எடுத்த நிலையில் மனீஷ் பாண்டே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் செல்ல இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட் ஆன கொல்கத்தா அணி 169 ரன்கள் எடுத்தது .

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பூஜையுடன் தொடங்கிய நடிகர் கவினின் அடுத்த படம் - வைரல் போட்டோஸ்..!!

More in Featured

To Top