Connect with us

10 வருடம் மேல் ஆகியும் குழந்தை இல்லாதது ஏன்?.. கேள்வி கேட்பவர்களுக்கு கிகியின் கடுமையான பதிலடி!

Featured

10 வருடம் மேல் ஆகியும் குழந்தை இல்லாதது ஏன்?.. கேள்வி கேட்பவர்களுக்கு கிகியின் கடுமையான பதிலடி!

மிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் பிரபலமானவர் கே.பாக்யராஜ். இயக்குநராகவும், நடிகராகவும் அசத்தியவர். அவரின் மகன் சாந்தனு, வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

பின்னர், நாயகனாக சக்கரகட்டி படம் மூலம் திரையுலகில் களமிறங்கினார். ஆனால் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும், பெரிய வெற்றிப்படம் இன்னும் அமையவில்லை. சாந்தனு, சினிமாவில் அறிமுகமான பிறகு, நீண்ட காலமாக காதலித்து வந்தவர், பிரபல டிவி தொகுப்பாளர் கிகியை 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கிகி தற்போது இரண்டு நடன பள்ளிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சமீபத்தில், கிகி தன்னுடைய யூடியூப் சேனலில், “பதினெட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை ஏன் இல்ல?” என்று பலரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “எங்களிடம் எல்லோரும் குழந்தை எப்போது பிறக்கும் என்று கேட்கிறார்கள். நாங்கள் குழந்தை பெற தயாராகவே இருக்கிறோம். ஆனால், அந்த குழந்தைகளை நீங்கள் வளர்த்துக் கொடுக்கப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நாங்கள் இப்படி பேசுவதால், திமிராகவோ ஆணவமாகவோ நினைக்க வேண்டாம். எங்களுக்குள்ள வலி மற்றும் மன அழுத்தத்தால் தான் இப்படி பேசுகிறோம்,” என்றும் தெரிவித்துள்ளார். “நாங்கள் நொந்து போயிருக்கிறோம். கடவுள் எப்போது குழந்தையை தர வேண்டுமென்று நினைக்கிறாரோ, அப்போது தான் அவர் தருவார்,” என்று எமோஷனலாக பகிர்ந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Featured

To Top