Connect with us

‘கூலி’ படத்தில் ரஜினியின் – லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!

Featured

‘கூலி’ படத்தில் ரஜினியின் – லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கடைசி படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றதுடன், லாபத்தில் தயாரிப்பாளர்கள் ரஜினிக்கு ஒரு பிரம்மாண்டமான கார் பரிசாக வழங்கினர்.

தற்போது, ரஜினியின் அடுத்த படம் ‘கூலி’யையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் ரஜினியுடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, நாகர்ஜுனா மற்றும் ஷோபின் ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை அனிருத் உருவாக்கியுள்ளார். ரூ. 375 கோடி என்ற பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

ரஜினியின் சமீபத்திய படங்களில், அவரின் பழைய படங்களிலிருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு இடம்பெறுவது வழக்கமாக இருக்கிறது. இதையடுத்து, ‘கூலி’ படத்திலும் அவரது பழைய படங்களின் காட்சிகள் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ரஜினியின் பழைய காட்சிகளை எதையும் நாங்கள் மீள உருவாக்கவில்லை. ஆனால் அவரது பழைய ஸ்டைலை இந்த படத்தில் கொண்டுவந்துள்ளோம்” என்று கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top