Connect with us

மகளிர் டி20 உலகக்கோப்பை : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

Featured

மகளிர் டி20 உலகக்கோப்பை : இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

மகளிர் டி20 உலக்கோப்பையில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் லீக் போட்டிகள் அனல் பறக்க நடைபெற்று வரும் நிலையில் இன்று இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அணி பந்துவீசி வருகிறது

நடப்பு தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வியையும் ஒரு போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக இன்று நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் டி20: இந்தியா எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

More in Featured

To Top