Connect with us

விஜய் முதல்வராக வேண்டி ஈரோட்டில் பெண்கள் பால்குடம் பேரணி

Cinema News

விஜய் முதல்வராக வேண்டி ஈரோட்டில் பெண்கள் பால்குடம் பேரணி

ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் 150 பால்குடங்களை எடுத்துக்கொண்டு பேரணியாக கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அருள்மிகு மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து, விஜய் அரசியலில் பெரிய வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று வேண்டி சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிகழ்வில் விஜய் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக இருந்தனர். இந்த வழிபாடு தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அந்த பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “சூர்யா ‘கருப்பு’ பட ரிலீஸ் தேதி மாற்றம்! RJ பாலாஜி புதிய அப்டேட்”

More in Cinema News

To Top