Connect with us

இனி வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது – தூத்துக்குடியில் தொழில் தொடங்குகிறது வின்பாஸ்ட் நிறுவனம்..!!

Featured

இனி வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமிருக்காது – தூத்துக்குடியில் தொழில் தொடங்குகிறது வின்பாஸ்ட் நிறுவனம்..!!

உலகளவில் பிரபலமாக இருக்கும் எலக்ட்ரானின் கார் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் பல்லாயிரம் கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில் கூறிருப்பதாவது :

உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது. அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் #EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்.

தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்.

TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Gentleman Driver 2025: அஜித் குமாருக்கு சர்வதேச பெருமை!”

More in Featured

To Top