Connect with us

வெற்றி கணக்கை தொடங்குமா பெங்களூரு அணி..? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்..!!

Featured

வெற்றி கணக்கை தொடங்குமா பெங்களூரு அணி..? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்ள உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

ஏற்கனவே தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் மோதிய பெங்களூரு அணி அதில் தோல்வியை சந்தித்தது . இதுபோல் ராஜஸ்தான் அணியுடன் தனது முதல் போட்டியை சந்தித்த பஞ்சாப் அணி அதில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top