Connect with us

காம்பீரின் தேர்வு சரியாக இருக்குமா..? இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு..!!

Featured

காம்பீரின் தேர்வு சரியாக இருக்குமா..? இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு..!!

இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது . அங்கு இலங்கை அணிக்கு எதிராக 3 டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது .

இதில் ஜூலை 27, 28, 29 ஆகிய தேதிகளில் மூன்று டி20 போட்டிகளிலும் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் தேதிகளில் ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது .

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடப்போகும் இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி ரோஹித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாகவும் , சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாகவும் ODI, T20 இரு தொடருக்கும் கில் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் தொடர் இந்திய அணி :

ரோஹித் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், துபே, குல்தீப், சிராஜ், சுந்தர், அர்ஷ்தீப், பராக், அக்ஸர், கலீல் மற்றும் ரானா

டி20 தொடர் இந்திய அணி :

சூர்ய குமார் (கேப்டன்), கில் (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், ரிங்கு, பராக், ரிஷப் பண்ட், சஞ்சு, ஹர்திக், துபே, அக்ஸர், சுந்தர், பிஷ்னோய், அர்ஷ்தீ, கலீல் மற்றும் சிராஜ்

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை மற்றும் ஜிம்பாவே தொடரை வெற்றியுடன் முடித்துள்ள இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான இந்த இரு தொடர்களிலும் கோப்பையை வென்று அசத்துமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Villain Role இல்ல!” 👀 | ‘Benz’ பட ரகசியத்தை உடைத்த Nivin Pauly 😮🔥

More in Featured

To Top