Connect with us

துபாய் அழைத்துச் செல்லாததால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி கைது..!!

Featured

துபாய் அழைத்துச் செல்லாததால் கணவரை போட்டுத்தள்ளிய மனைவி கைது..!!

பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் கணவரை கொன்ற மனைவி புனேவில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

புனே மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரேணுகா நிகில் தம்பதி நடுத்தர வயது வகுப்பை சேர்ந்த இவர் தனது இல்லற வாழ்க்கையை ஆனந்தமாக வாழ்ந்து வந்துள்ளனர் . இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட துபாய் அழைத்துச் செல்லுமாறு மனைவி ரேணுகா கணவர் நிகிலிடம் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிகில் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ரேணுகாவின் காட்ஸ்லியான ஆசைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் இந்த துபாய் சுற்றுலா குறித்து ரேணுகா நிகிலிடம் சண்டையிட ஒருகட்டத்தில் பயங்கர கோபமடைந்த ரேணுகா ஆத்திரத்தில் , நிகிலின் முகத்தில் குத்தியுள்ளார் .ரேணுகா குத்தியதும் நிகிலின் பற்கள் உடைந்து ரத்தம் கசிந்துள்ளது.

பின்னர் சற்று நேரத்தில் நிகில் சுயநினைவை இழந்து, கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன் மனைவி ரேணுகாவையம் கைது செய்து தீவரை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் கணவரை கோபத்தில் கொன்ற மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது புனேவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஷங்கரின் கனவு படம்: ஹீரோ யார்? ரசிகர்களிடையே பரபரப்பு

More in Featured

To Top