Connect with us

அழகான ஹீரோயின்களுக்கு ஏன் கருப்பு மேக்கப், பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்

mari selvaraj

Cinema News

அழகான ஹீரோயின்களுக்கு ஏன் கருப்பு மேக்கப், பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்

Mari Selvaraj: துருவ் விக்ரம் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. சமூகப் பின்னணி கொண்ட இந்த திரைப்படம், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், துருவ் விக்ரமின் நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

இதையொட்டி, படம் தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்த பேட்டியில், ஒரு வெள்ளைத் தோற்றமுள்ள ஹீரோயினை தேர்வு செய்து, அவருக்கு கருப்பு மேக்கப்பைப் போட்டு நடித்தது ஏன்? என்பது குறித்து கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ் கோபத்தில் கொடுத்த பதில் என்னவென்றால்,

அது ஒரு சாய்ஸ். நிஜ வாழ்க்கையில் ஊனமுற்றவரைத் தேர்வு செய்து நடிக்க வைப்பதா? அது அவர்களை வலிக்கச் செய்யக்கூடியதாக இருக்கலாம். அதைப் போலத்தான் இது ஒரு சிந்தனை. தோற்றம் அல்ல, அர்ப்பணிப்பு முக்கியம். யார் அந்தக் கதையின் உணர்வை உணர்ந்து செயல்பட முடிகிறார்களோ, அவர்களைத்தான் தேர்வு செய்கிறோம்.

இவ்வாறு தனது படங்களில் எடுக்கும் முடிவுகள் கலை, சமூக நுணுக்கம் மற்றும் மனித மரியாதையின் அடிப்படையில் அமைகின்றன என்பதை இயக்குநர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உங்களுடைய கதைகள் ஏன் ஒரு பட்சமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ், எந்த ஒரு தனிமனிதனையும் திருப்தி படுத்த முடியாது.

இந்த நாட்டின் பிரஜை நான், என்னை பாதித்த கதை, என் அப்பாவின் கதை, என் தாத்தாவின் கதை, சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதை சாகும் வரை சொல்வேன். உங்க வாழ்க்கை வேறு என் வாழ்க்கை வேறு உங்கள் வாழ்க்கையை வைத்து நீங்கள் என் வாழ்க்கை பார்க்க கூடாது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரும்புகிற இடமெல்லாம் சிவகார்த்திகேயனின் வெற்றி, மீண்டும் இணையும் டான் பட கூட்டணி

More in Cinema News

To Top