Connect with us

திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்தேன்” – 90களின் பிரபல நாயகி விசித்ராவின் உணர்ச்சிப் பகிர்வு..

Featured

திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்தேன்” – 90களின் பிரபல நாயகி விசித்ராவின் உணர்ச்சிப் பகிர்வு..

‘போர்க்கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை விசித்ரா. தனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். பின்னர் திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகினார்.

சின்னத்திரைக்கு திரும்பிய அவர் ‘குக் வித் கோமாளி’, ‘பிக் பாஸ்’ போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் ரசிகர்களிடையே பரிச்சயமானார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு கௌரவ விழாவில் கலந்து கொண்ட நடிகை விசித்ரா, தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றி பேசினார். அவர் கூறியதாவது: “90களில் நான் நடித்து கொண்டிருந்தபோது எனக்கு திருமணம் ஆகுமா, நல்ல கணவர் கிடைப்பாரா என பலமுறை யோசித்திருக்கிறேன். திருமணமே வேண்டாம். சிங்கிளாகவே இருந்துவிடலாம் என ஒரு கட்டத்தில் முடிவும் எடுத்திருந்தேன்.

அப்போது என் கணவர் என்னிடம் ‘நம்மால் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என கேட்டார். ஆனால் அதற்குப் பிறகும் பலமுறை இதைப் பற்றி யோசித்தேன். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மிகவும் சவாலானதாக மாறியது. இப்போது நான் கடந்துவரும் இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தை நினைத்துப் பார்ப்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்.” நடிகை விசித்ராவின் இந்த உரை பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "இரண்டு படம் நடிச்சாலும், ‘பைசன்’ தான் என் முதல் படம்" – துருவ்

More in Featured

To Top