Connect with us

“சல்மான் கானின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் பிரபல அஜித் பட இயக்குனர்?! தயாரிப்பாளர் இவர்தானா?”

Cinema News

“சல்மான் கானின் அடுத்த படத்தை இயக்கவிருக்கும் பிரபல அஜித் பட இயக்குனர்?! தயாரிப்பாளர் இவர்தானா?”

அஜித் நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர், சல்மான் கான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜீத் நடித்த ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். தற்போது நடிகர் அதர்வா சகோதரர் மற்றும் அதிதி சங்கர் நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சல்மான் கான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’தி புல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குனர் விஷ்ணுவர்தன், சித்தார்த் மல்ஹோத்ரா, கைரா அத்வானி நடிப்பில் உருவான ’ஷேர்ஷா’ என்ற இந்தி படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியாகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - எப்போது தெரியுமா..?

More in Cinema News

To Top