Connect with us

விஷால் நடிப்பில் உருவான ‘ரத்னம்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!!

Cinema News

விஷால் நடிப்பில் உருவான ‘ரத்னம்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!!

ஹரி மற்றும் விஷாலின் முரட்டு தனமான காம்போவில் உருவாக உள்ள ரத்னம் படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு பெயர் போன இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவர்கள் ஹரி மற்றும் விஷால்.இவர்கள் இருவருமே தற்போது ஒரே படத்தில் கமிட்டாக உள்ளனர் .

நீண்ட நெடு நாட்களுக்கு பின் மார்க் ஆண்டனி என்ற சூப்பர் டூப்பர் வெற்றி படத்தை கொடுத்த விஷால் தற்போது தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கைகோர்த்துள்ளார் .

ரத்னம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் இப்படத்தில் நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் கனல்கண்ணனை இப்படத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் ஹரி .

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் அமைந்திருக்கும் இந்த ட்ரைலரை பார்த்து எப்படி உள்ளது என்பதை எங்களுடன் பகிருங்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பலமுறை கேட்டும் சிவகார்த்திகேயன் எனக்கு வாய்ப்பு தரவில்லை - பொதுமேடையில் பொங்கிய வடிவுக்கரசி..!!

More in Cinema News

To Top