Connect with us

அடுத்த படத்திற்கு Location பார்ப்பதற்காக London சென்றார் விஷால்..!

Cinema News

அடுத்த படத்திற்கு Location பார்ப்பதற்காக London சென்றார் விஷால்..!

நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான ’ரத்னம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அடுத்த படத்திற்கு லொகேஷன் பார்க்க லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஆக்சன் ஹீரோ விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்த ’ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.இதனை அடுத்து அவர் சில ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ’துப்பறிவாளன் 2’ படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் மிஷ்கின் மற்றும் விஷால் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இதனை அடுத்து விஷால் இந்த படத்தை தொடர்ந்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ’துப்பறிவாளன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு லொகேஷன் பார்க்க விஷால் லண்டன் சென்று இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஷால் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ’துப்பறிவாளன் 2’ படத்தின் ஸ்டில்ஸ் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் இது குறித்த பணியை தொடங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. விஷால், பிரசன்னா, ரகுமான், நாசர், ஜெயபிரகாஷ், கெளதமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். முதல் படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

More in Cinema News

To Top