Connect with us

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே! விஷால் சொன்ன ஹேப்பி நியூஸ்..

Featured

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே! விஷால் சொன்ன ஹேப்பி நியூஸ்..

தமிழ் சினிமாவில் நுழைந்ததும் சிறுகாலத்தில் பல ஹிட் படங்களை வழங்கியவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, விஷால் நடிப்பில் வெளியான மதகஜராஜா திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்தது.

தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் நடிகர் விஷால், சமீபத்தில் நடைபெற்ற யோகி பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது, நடிகை தன்சிகாவை வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து, செய்தியாளர்கள் அவரிடம் நடிகர் சங்க கட்டட திறப்பு எப்போது நடைபெறும் மற்றும் அவரது திருமணம் தொடர்பான விவரங்களை கேட்டனர். அதற்கு அவர்,

“ஒன்பது வருடங்கள் தாக்குப்பிடித்துவிட்டேன். இன்னும் இரண்டு மாதங்கள் தான். ஆகஸ்ட் 29ம் தேதி என் பிறந்தநாள். அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது. நான் சொன்னபடி அந்த கட்டடம் தயாரானதும் முதல் திருமணம் என்னுடையதுதான்,” என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. அவரது ரசிகர்கள், விரைவில் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க உள்ள விஷாலுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top