Connect with us

புதிய லுக்கில் புத்துணர்ச்சியுடன் வந்த விராட் கோலி – வைரல் வீடியோ

Featured

புதிய லுக்கில் புத்துணர்ச்சியுடன் வந்த விராட் கோலி – வைரல் வீடியோ

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இன்று லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்காக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதி லண்டன் சென்றிருந்த நிலையில் இன்று இந்தியா திரும்பியுள்ளார் விராட் கோலி.

லண்டனில் இருந்து இன்று மும்பை வந்துள்ள விராட் கோலி விரைவில் தனது பெங்களூர் அணியுடன் இணைந்து பயிற்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது .

நீண்ட நாட்களாக விராட் கோலியை பாக்க முடியாமல் இருந்த நிலையில் இன்று அவர் மும்பை விமான நிலையத்தில் புதிய லுக்கில் இருக்கும் வீடியோ தற்போது செம் வைரலாகி வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு – மகன் புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

More in Featured

To Top