Connect with us

“Thug Life Making Video இப்படி இருக்குமா?! இது இவரால மட்டும் தான் பண்ணமுடியும்! அப்போ படம் வேற Level தான் போல..!”

Cinema News

“Thug Life Making Video இப்படி இருக்குமா?! இது இவரால மட்டும் தான் பண்ணமுடியும்! அப்போ படம் வேற Level தான் போல..!”

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக விக்ரம் படம் வெளியானது. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கடந்தாண்டே இதுகுறித்து அறிவிப்பு வெளியானாலும், அதன்பின்னர் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கும் படம் பற்றிய அப்டேட் வெளியானது.

அதன்படி, KH 234 டைட்டில் தக் லைஃப் என டீசருடன் அறிவிக்கப்பட்டது. இந்த டீசரில், “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்” என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டினார் கமல்ஹாசன். இதனால் தக் லைஃப் பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் கமிட்டாகியுள்ளனர். விக்ரமை தொடர்ந்து தக் லைஃப்-ம் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகவுள்ளது.

இந்நிலையில், தக் லைஃப் டைட்டில் டீசரின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. மணிரத்னம், அன்பறிவ் மாஸ்டர்ஸ் இணைந்து கோரியோகிராபி செய்துள்ள இந்த ஆக்‌ஷன் டீசரில், கேமரா ஒர்க் மிரட்டலாக உள்ளது. தக் லைஃப் டீசரையே பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் மணிரத்னம். இதனால் மொத்த படமும் இதைவிட செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் தக் லைஃப் டைட்டில் டீசர் மேக்கிங், ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல், கமல்ஹாசனின் கேரக்டர் பெயரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்பது ஜாதி பெயர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் ஒருசேர வந்துள்ள நிலையில், படம் வெளியான பின்னர் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘PT சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top