Connect with us

ஒலிம்பிக் தொடரில் போர் வீரனைப் போல சண்டையிடும் வினேஷ் போகத் – ஜொலிஜொலிக்கும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு..!!

Featured

ஒலிம்பிக் தொடரில் போர் வீரனைப் போல சண்டையிடும் வினேஷ் போகத் – ஜொலிஜொலிக்கும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு..!!

மல்யுத்த விளையாட்டில் சிங்கப் பெண்ணாக வலம் வரும் இந்தியாவின் வினேஷ் போகத் நடப்பு ஒலிம்பிக் தொடரில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் அவரது வளர்ச்சியை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று மகளிருக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது . இதில் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் விளையாடினார் .

இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பான் நாட்டைச் சர்ந்த யூ சுசாகியை எதிர்கொண்ட வினேஷ் போகத் 3 – 2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற போட்டியில் உக்ரைன் வீராங்கனையை எதிர்கொண்ட வினேஷ் போகத் அவரையும் வீழ்த்தி தற்போது அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

இந்த போட்டியின்போது இந்திய வீராங்கனை வினேஷ் போகத் குறித்து வர்ணணையாளர்கள் கூறியதாவது :

வினேஷ் போகத்தின் திறனை பாருங்கள். கடந்தாண்டு அவருக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. அவரது நாட்டின் வீதிகளில் இறங்கி போராடி, கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவர் பாதையில் அவை எதுவுமே குறுக்கிடவில்லை. ஒரு போர் வீரனைப் போல சண்டையிட்டுள்ளார் என தெரிவித்தனர்.

இதேபோல் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வினேஷ் போகத் குறித்து கூறியதாவது :

பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.

காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Featured

To Top