Connect with us

வில்லன் நடிகர் விஜய ரங்கராஜு திடீர் மரணம்: திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சி..

Featured

வில்லன் நடிகர் விஜய ரங்கராஜு திடீர் மரணம்: திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சி..

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் விஜய ரங்கராஜு (ராஜ்குமார்) திடீர் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பல குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் மாபெரும் புகழ் பெற்றவர். பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பைரவ தீபம் என்ற திரைப்படத்தில் தனது நடிகராக அறிமுகமான விஜய ரங்கராஜு, பின்னர் வியட்நாம் காலனி போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து, தமிழில், தெலுங்கிலும், மலையாளத்திலும் தனக்கு ஒரு விசித்திரமான இடத்தை பிடித்தார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காயமடைந்த இவர், சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகிற்கு ஒரு மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய ரங்கராஜுவுக்கு தீக்ஷிதா மற்றும் பத்மினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரின் மறைவு, திரையுலகினரிடையே ஆழ்ந்த இரங்கலை ஏற்படுத்தி, அவரின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ரோ கோட்’ தலைப்பு வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு

More in Featured

To Top